கொரோனாவில் இருந்து மீண்டார் சுமலதா எம்.பி.

கொரோனாவில் இருந்து மீண்ட சுமலதா எம்.பி., விரைவில் மக்கள் பணிக்கு திரும்புவேன் என்று டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
சுமலதா
சுமலதா
Published on

பெங்களூரு :

கர்நாடகத்தில் மக்கள் பிரதிநிதிகளையும் கொரோனா தாக்கி வருகிறது. ஏற்கனவே பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள், 3 மேல்-சபை உறுப்பினர்கள், 2 எம்.பி.க்கள் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருந்தனர். இதில் மறைந்த கன்னட நடிகர் அம்பரீசின் மனைவியும், மண்டியா தொகுதி சுயேச்சை எம்.பி.யான சுமலதாவும் ஒருவர் ஆவார்.

கடந்த 6-ந் தேதி தனது டுவிட்டரில் சுமலதா எம்.பி. ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அந்த பதிவில் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், இதனால் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுமலதா எம்.பி. கொரோனாவில் இருந்து மீண்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவலை மறுத்த சுமலதா எம்.பி. தான் இன்னும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் சுமலதா எம்.பி. தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அந்த பதிவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

நான் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளேன். உங்கள் அனைவரின் பிரார்த்தனையால் தான் நான் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்து உள்ளேன். இந்த 3 வார கால கட்டாய தனிமையை மன வேதனையுடன் அனுபவித்து முடித்து உள்ளேன். தற்போது எனக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் எனக்கு வைரஸ் தொற்று இல்லை என்று வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி ஒரு வாரம் வீட்டில் ஒய்வெடுக்க உள்ளேன். விரைவில் மக்கள் பணிக்கு திரும்புவேன்.

இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டு இருந்தது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com