சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி- அர்ஜென்டினாவிடம் வீழ்ந்தது இந்தியா

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பைக்கான ஹாக்கி தொடரில் தொடக்க ஆட்டத்தில் அர்ஜென்டினாவிடம் இந்தியா தோல்வியடைந்தது. #AzlanShahCup
சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி- அர்ஜென்டினாவிடம் வீழ்ந்தது இந்தியா
Published on

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் மலேசியாவில் இன்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் இந்தியாவும், ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினாவை மோதின.

அர்ஜென்டினா வீரர் கோன்சாலோ பெய்லாட் 13 மற்றும் 23-வது நிமிடங்களில் கோல் அடித்தார். அதற்குப் பதிலாக இந்தியாவின் அமித் ரோஹிதாஸ் 24 மற்றும் 32-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 2-2 என சமநிலை பெற்றது.

இந்தியா சமநிலை செய்த அடுத்த நிமிடத்தில், ஆட்டத்தின் 33-வது நிமிடத்தில் கோன்சாலோ மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் அர்ஜென்டினா 3-2 என முன்னிலைப் பெற்றது. கனமழைக் காரணமாக நான்காவது கால்பகுதி ஆட்டம் தடைபெற்றது. பின்னர் ஆட்டம் தொடங்கியதும் இந்திய வீரர்களில் கோல் அடித்து சமநிலைப்படுத்த முடியவில்லை.

இதனால் அர்ஜென்டினா 3-2 என வெற்றி பெற்றது. இந்தியா அடுத்த போட்டியில் நாளை இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. 6-ந்தேதி ஆஸ்திரேலியாவையும், 9-ந்தேதி அயர்லாந்தையும் எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com