இரட்டை இலை சின்னம் விவகாரம்: சுகேஷ்சந்திரசேகர் மீண்டும் ஜாமீன் மனு

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் ஜாமீன் வழங்க கோரி சுகேஷ் சந்திரசேகர் டெல்லி ஹசாலி கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் விவகாரம்: சுகேஷ்சந்திரசேகர் மீண்டும் ஜாமீன் மனு
Published on

புதுடெல்லி:

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பெங்களூரைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திர சேகர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் கைதான டி.டி.வி. தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோருக்கு சமீபத்தில் ஜாமீன் கிடைத்தது.

இதை தொடர்ந்து தனக்கும் ஜாமீன் வழங்க கோரி சுகேஷ் சந்திரசேகர் டெல்லி ஹசாலி கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது ஜாமீன் மனுவை ஏற்கனவே கோர்ட்டு நிராகரித்து இருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com