சுபாஷ் சந்திரா கர்க் நிதித்துறை செயலாளராக நியமனம்

சுபாஷ் சந்திரா கர்க் நிதித்துறை செயலாளராக நியமனம்

பொருளாதார விவகார துறை செயலாளராக இருந்து வந்த சுபாஷ் சந்திர கர்க், நிதித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். #FinanceSecretary #SubhashChandraGarg
Published on

புதுடெல்லி:

பொருளாதார விவகார துறை செயலாளராக இருந்து வருபவர் சுபாஷ் சந்திர கர்க். இவர் நிதித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

மத்திய நிதித்துறை செயலாளராக இருந்த அஜய் நாராயண் ஜா வயது முதிர்வு காரணமாக பிப்ரவரி 28-ம் தேதி ஓய்வு பெற்றார். அந்த பணியிடம் காலியாக இருந்தது. 

இந்நிலையில், சுபாஷ் சந்திர கர்கை நிதித்துறை செயலாளராக நியமித்து மத்திய அரசின் நிதி்த்துறை மற்றும் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை உத்தரவு பிறப்பித்தது. புதிய நிதித்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கர்க் கீழ் பல்வேறு 5 துறைகள் உள்ளன. மத்திய அரசின் நியமன கமிட்டி இதற்கு ஒப்புதல் அளித்தது. #FinanceSecretary #SubhashChandraGarg

X

Maalai Malar
www.maalaimalar.com