பசிபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 6.6 ரிக்டர் அளவில் பதிவானது

பசிபிக் கடலின் தெற்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனாலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை.
பசிபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 6.6 ரிக்டர் அளவில் பதிவானது
Published on

நவ்மியா:

பசிபிக் கடலின் தெற்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனாலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை.

ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள நியூ கலிடோனியா தீவில் டடைன் பகுதியில் இன்று மாலை (இந்திய நேரப்படி) 3.16 மணியளவில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் 6.6 ரிக்டர் அளவுகோலாக பதிவானது. டடைன் பகுதிக்கு 324 கிமீ தொலைவில் சுமார் 89 கிமீ ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் அந்த பகுதியில் உள்ள வீடுகள் குலுங்கின. கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது. நிலநடுக்கம் தொடர்பான சேத விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com