

ஜென்னிங்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஸ்டோன்மேன் என்ற புதுமுக தொடக்க பேட்ஸ்மேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் டாவ்சன் என்ற சுழற்பந்து வீச்சாளர் நீக்கப்பட்டு, கிரேன் என்ற புதுமுக வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.
2002-ம் ஆண்டு இங்கிலாந்து அணியின் ஸ்டாரஸ் டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்குப்பின் அலஸ்டைர் குக் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நிலையான தொடக்க வீரர்கள் கிடைக்கவில்லை. ஸ்டோன்மேன் குக் உடன் இணையும் 12-வது வீரராவார்.
ஆஷஸ் தொடருக்கு முன் சிறந்த தொடக்க வீரரை அடையாளம் காண இங்கிலாந்து முயற்சித்து வருகிறது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் 17-ந்தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் பகல்-இரவு போட்டியாக நடக்க இருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்டிற்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-