சென்னிமலையில் இருந்து ஈரோடு வந்த பஸ் மீது கல் வீசி தாக்குதல்

சென்னிமலையில் இருந்து ஈரோடு வந்த பஸ் மீது கல் வீசி தாக்கினர். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. பயணிகள் கூக்குரலிட்டனர்.
சென்னிமலையில் இருந்து ஈரோடு வந்த பஸ் மீது கல் வீசி தாக்குதல்
Published on

சென்னிமலை:

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் பஸ் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

போராட்டம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை. இந்த நிலையில் ஈரோட்டில் இருந்து சென்னிமலை நோக்கி அரசு பஸ் (தடம் எண் 11) வந்து கொண்டிருந்தது.

ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடமான கவுண்டிச்சிபாளையம் பஞ்சாயத்து தொட்டிபாளையம் பிரிவு அருகே அந்த பஸ் வந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அந்த பஸ்சின் முன்புறம் கற்களை வீசி தாக்கினர். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. பயணிகள் கூக்குரலிட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கல்வீச்சு சம்பவத்துக்கு பின்னர் சென்னிமலை, வெள்ளோடு போலீசார் உஷார்படுத்தப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com