4-வது ஒருநாள் போட்டியில் ஸ்டோக்ஸ், ஹேல்சுக்கு அணியில் இடமில்லை: இங்கிலாந்து அதிரடி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் ஸ்டோக்ஸ் மற்றும் ஹேல்சுக்கு அணியில் இடமில்லை என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
4-வது ஒருநாள் போட்டியில் ஸ்டோக்ஸ், ஹேல்சுக்கு அணியில் இடமில்லை: இங்கிலாந்து அதிரடி
Published on

லண்டன்:

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், ஒரு டி-20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்டில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தும், டி-20-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை நடந்த 3 ஒருநாள் போட்டிகளில் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

இதற்கிடையே, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கடந்த திங்கட்கிழமை பிரிஸ்டோனில் ஒரு நபரை தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

சந்தேகத்தின் பேரில் பென் ஸ்டோக்ஸை போலீசார் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். அதன்பின்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவரை வெளியே விட்டுள்ளனர். அவருடன் மற்றொரு வீரர் ஹேல்ஸும் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் ஸ்டோக்ஸ் மற்றும் ஹேக்ஸ் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என இங்கிலாந்து அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடருக்கான அணி இன்று அறிவிக்கப்பட்டது. 16 பேர் கொண்ட அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com