அமெரிக்கா: செக்ஸ் குற்றச்சாட்டில் குடியரசுக்கட்சியின் முக்கிய தலைவர் ராஜினாமா

அமெரிக்க குடியரசுக்கட்சியின் நிதித்தலைவரும், தொழிலதிபருமான ஸ்டீவ் வின் மீது செக்ஸ் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அமெரிக்கா: செக்ஸ் குற்றச்சாட்டில் குடியரசுக்கட்சியின் முக்கிய தலைவர் ராஜினாமா
Published on

வாஷிங்டன்:

அமெரிக்காவில் ஆளும் குடியரசுக்கட்சியின் தேசிய கமிட்டி நிதித்தலைவராக இருப்பவர் ஸ்டீவ் வின். கோடீஸ்வர தொழிலதிபரான வின் மீது சில நாட்களுக்கு முன்னர் செக்ஸ் குற்றச்சாட்டு எழுந்தது. தனது அலுவலக பெண் பணியாளரை கட்டாயப்படுத்தி தனது உறவுக்கு பயன்படுத்தினார் மற்றும் மசாஜ் செய்யும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழில் செய்தி வெளியானது.

இதனையடுத்து, ஸ்டீவ் வின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்தது. ஆனால், மேற்கண்ட குற்றச்சாட்டுகளை ஸ்டீவ் வின் மறுத்தார். தனது முன்னாள் மனைவியே இந்த பொய் செய்திகளுக்கு காரணம் என அவர் தெரிவித்தார்.

எதிர்ப்புகள் வலுத்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஸ்டீவின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக குடியரசு கட்சி தேசிய கமிட்டி தலைவர் மெக் டேனியல் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இதே போன்ற செக்ஸ் புகாரில், ஜனநாயக கட்சியின் செனட் உறுப்பினர் அல் பிராங்கன், குடியரசு கட்சியின் பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ட்ரெண்ட் பிராங்ஸ் ஆகிய இருவரும் ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com