

கடைசி போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 346 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 91 ரன்னுடனும், ஸ்மித் 44 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
ஸ்மித்திற்கு இது 61-வது போட்டியாகும். முதல் இன்னிங்சில் 26 ரன்களை தொட்டபோது 6000 ஆயிரம் என்ற மைல்கல்லை எட்டினார். 6 ஆயிரம் ரன்கள் அடிப்பதற்கு ஸ்மித்திற்கு 111 இன்னிங்ஸ் மட்டுமே தேவைப்பட்டது. இதன்மூலம் அதிவேகமாக 6 ஆயிரம் ரன்கள் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.