தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்- 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகக்கூடும்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்காலுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை.
தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்- 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
Published on

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (14-ந்தேதி) உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாயப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேபோல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்காலுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com