மாநில கைப்பந்து: சுங்க இலாகா-ஐ.சி.எப். அணிகள் வெற்றி

மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் ஐ.சி.எப். மற்றும் சுங்க இலாகா அணிகள் வெற்றி பெற்றனர்.
மாநில கைப்பந்து: சுங்க இலாகா-ஐ.சி.எப். அணிகள் வெற்றி
Published on

சென்னை:

சுந்தர் நினைவு கைப்பந்து கிளப் சார்பில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி கோடம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் நேற்று தொடங்கியது. கு.க. செல்வம் எம்.எல்.ஏ. போட்டியை தொடங்கி வைத்தார். போட்டி அமைப்பாளர் பென்னி கூக் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

ஆண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் ஐ.சி.எப். 25-23, 25-15, 23-25, 30-28 என்ற கணக்கில் தமிழ்நாடு போலீசை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் சுங்க இலாகா 16-25, 21-25, 25-16, 25-15, 17-15 என்ற கணக்கில் செயிண்ட் ஜோசப்ஸ் அணியை வீழ்த்தியது.

பெண்கள் பிரிவில் ஜி.கே.எம். பவுண்டேசன் 25-21, 25-12 என்ற கணக்கில் பனிமலர் என்ஜினீயரிங் கல்லூரியை வீழ்த்தியது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com