கமலுடன் சேர்ந்து நடிப்பதால் ஸ்டாலினுக்கு சிறந்த நடிகருக்கான விருது - அமைச்சர் ஜெயக்குமார்

கமலுடன் சேர்ந்து நடிப்பதால் ஸ்டாலினுக்கு சிறந்த நடிகருக்கான விருதை கொடுக்க வேண்டும் என்று தமிழக நிதிஅமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
கமலுடன் சேர்ந்து நடிப்பதால் ஸ்டாலினுக்கு சிறந்த நடிகருக்கான விருது - அமைச்சர் ஜெயக்குமார்
Published on

சென்னை:

தமிழக அரசு குறித்து நடிகர் கமல்ஹாசல் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகின்றார். குறிப்பாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு, போதுமான குற்றங்கள் நடைபெற்றுவிட்டதால் தமிழக முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்றே கமல் வலியுறுத்தினார்.

இந்நிலையில், கமலுடன் சேர்ந்து நடிப்பதால் ஸ்டாலினுக்கு சிறந்த நடிகருக்கான விருதை கொடுக்க வேண்டும் என்று தமிழக நிதிஅமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக நிலைத்து நூறாண்டுகள் இருக்க வேண்டும் என்ற தொண்டர்களின் எண்ணத்திற்கு மாறாக செயல்படுபவர்களே எட்டப்பர்கள். 

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கூறும் கருத்துக்களை பொருட்படுத்த தேவையில்லை. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்; மக்கள்தான் எஜமானர்கள்”

 என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com