பட்ஜெட் அல்ல தந்திரத்துடன் கூடிய தேர்தல் அறிக்கை - ஸ்டாலின்

மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது பட்ஜெட் அல்ல, தந்திரத்துடன் கூடிய தேர்தல் அறிக்கை என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #Budget2019 #MKStalin
பட்ஜெட் அல்ல தந்திரத்துடன் கூடிய தேர்தல் அறிக்கை - ஸ்டாலின்
Published on

சென்னை:

பாராளுமன்ற மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் இன்று தாக்கல் செய்தார்.

இந்நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது பட்ஜெட் அல்ல, தந்திரத்துடன் கூடிய தேர்தல் அறிக்கை என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பட்ஜெட் மக்களை ஆசை வார்த்தை கூறி, திசைதிருப்பும் தந்திரத்துடன் கூடிய தேர்தல் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சில அறிவிப்புகள், உள்நோக்கம் நிறைந்ததாக அமைந்துள்ளன. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த அவசர நடவடிக்கை எடுப்போம் என்ற அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது.

கலால் வரியாக ரூ.18 லட்சம் கோடி வசூலித்து, பெட்ரோல், டீசல் விலையை மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. பா.ஜ.க அரசு ஏதோ திடீரென கனவு கண்டு எழுந்ததுபோல அறிக்கை தாக்கல் செய்துள்ளது. உண்மையில் இந்த அறிக்கை பிரதமர் மோடிக்கு கொடுங்கனவாகவே இருக்கப் போகிறது என குறிப்பிட்டுள்ளார். #Budget2019 #MKStalin

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com