நிலக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம்

நிலக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
போராட்டம்
Published on

கொடைரோடு:

மாநில தலைவர் சுப்பிரமணியன் பணி நிறைவு பெறும் நாளில் சஸ்பெண்டு செய்யப்பட்டதை கண்டித்தும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அரசாணை எண் 71-ன் படி ஊதியம் வழங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

மேலாளர் ராஜ்மோகன், மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், வட்டார செயலாளர் சின்னராஜா, ஆணையாளர் லாரன்ஸ், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com