கரீபியன் பிரிமீயர் லீக்கில் இருந்து செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணி அதிரடியாக நீக்கம்

கரீபியன் பிரிமீயர் லீக் தொடரில் இடம் பிடித்து வந்த செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணியை அதிரடியாக நீக்கியது நிர்வாகம்.
செயின்ட் லூசியா ஸ்டார்ஸ்
செயின்ட் லூசியா ஸ்டார்ஸ்
Published on

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை போன்று வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரிமீயர் லீக் தொடர் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது.

இதில் செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணி பங்கேற்று விளையாடி வந்தது. இந்த வருடத்திற்கான சீசன் செப்டம்பர் 4-ந்தேதி தொடங்குகிறது. இந்நிலையில் செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் கரீபியன் லீக்கில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்களுக்கு சரியாக சம்பளம் வழங்கப்படவில்லை உள்பட பல காரணங்களுக்காக நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. லூசியா அணிக்காக புது அணியை தேர்வு செய்யும் வேலை நடைபெறுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com