பாகிஸ்தான் சென்று ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது இலங்கை

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
பாகிஸ்தான்  இலங்கை கிரிக்கெட்
பாகிஸ்தான் இலங்கை கிரிக்கெட்
Published on: 

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது பயங்கரவாதிகள் வீரர்கள் சென்ற வாகனம் மீது துப்பாக்கிச்சுடு நடத்தினார்கள். இதில் சில வீரர்கள் காயம் அடைந்தனர்.

அதன்பின் எந்தவொரு நாடுகளும் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்தது. இறுதியில் ஜிம்பாப்வே அணி கடும் பாதுகாப்புகளுக்கு இடையில் மூன்று டி20 போட்டிகளில் விளையாடியது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சொந்த நாட்டில் போட்டியை நடத்த தொடர்ந்து முயற்சி எடுத்து வந்தது. இறுதியில் பாகிஸ்தான் சென்று விளையாட இலங்கை கிரிக்கெட் சங்கம் சம்மதித்துள்ளது.

அதன்படி பாகிஸ்தான் மண்ணில் இரு அணிகளும் தலா மூன்று 50 ஓவர் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளது. போட்டிகள் கராச்சி மற்றும் லாகூர் நகரில் நடக்க இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com