ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

விசைப்படகில் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
தமிழக மீனவர்கள் கைது
தமிழக மீனவர்கள் கைது
Published on

ராமேஸ்வரம்:

தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்கும்போது, எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், விசாரணைக்குப் பின்னர் விடுவிப்பதும் தொடர்ந்து நடைபெறுகிறது.  

இந்நிலையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், நேற்று இரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை சுற்றி வளைத்து அவர்களின் படகை சேதப்படுத்தினர். பின்னர் படகில் இருந்த கிங்ஸ்டன், இன்னாசி, நெல்சன், வில்லான் உள்ளிட்ட 6 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

X

Maalai Malar
www.maalaimalar.com