இலங்கையில் 4 மாதமாக இருந்துவந்த எமர்ஜென்சி முடிவுக்கு வந்தது

இலங்கையில் கடந்த 4 மாதமாக இருந்து வந்த எமர்ஜென்சி முடிவுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரோந்து பணியில் போலீசார்
ரோந்து பணியில் போலீசார்
Published on

கொழும்பு:

இலங்கையில் ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், ஓட்டல்களை குறிவைத்து தொடர் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. இதில் 258 பேர் உயிரிழந்ததுடன், 500-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலில் உள்ளூரில் இயங்கி வரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் மீது இலங்கை அரசு குற்றம் சாட்டியது. பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்கள் என பலர் கைது செய்யப்பட்டனர். 

இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் அவசர நிலையை அதிபர் சிறிசேனா பிறப்பித்தார். இது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இலங்கையில் கடந்த 4 மாதமாக நீட்டிக்கப்பட்டு வந்த அவசரநிலை முடிவுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் கூறுகையில், இலங்கை அதிபர் சிறிசேனா எமர்ஜென்சியை நீட்டிக்கக் கோரும் உத்தரவை பிறப்பிக்கவில்லை. இதையடுத்து, இலங்கையில் கடந்த 4 மாதமாக இருந்து வந்த எமர்ஜென்சி முடிவுக்கு வந்துள்ளது என தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com