பணத்தை மறைத்து எடுத்து செல்கிறார்களா? - சென்னையில் விமானப் பணிப்பெண்களிடம் சோதனை

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் வாடிக்கையாளர்களுக்கு உணவு விற்ற பணத்தை மறைத்து எடுத்துச் செல்வதாக கூறி தகாத முறையில் சோதனை செய்த வீடியோ வெளியாகியுள்ளது.
பணத்தை மறைத்து எடுத்து செல்கிறார்களா? - சென்னையில் விமானப் பணிப்பெண்களிடம் சோதனை
Published on

புதுடெல்லி:

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் ஏர் ஹோஸ்ட்டஸ் ஆக பணியாற்றும் பெண்கள் பயணத்தின்போது வாடிக்கையாளர்களுக்கு விமானத்தில் உள்ள உணவு மற்றும் தின்பண்டங்களை விலைக்கு விற்று அந்த பணத்தையும், சில பொருட்களையும் யாருக்கும் தெரியாமல் தங்களது உடலுக்குள் மறைத்து எடுத்துச் செல்வதாக அந்நிறுவனத்தாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதன் அடிப்படையில் கடந்த 28 மற்றும் 29 தேதி பணி முடிந்து சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய சில பணிப்பெண்களை சந்தேகத்தின் பேரில் தனியாக அழைத்து சென்று ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஆடைகளை விலக்கி சோதனையிட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தற்போது முறையிட்டுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாக அவர்களை சோதனைக்கு அழைத்து செல்லும் வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக பரவி வருகிறது.

இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஸ்பைஸ் ஜெட் நிறுவன உயரதிகாரிகள், ‘எங்கள் நிறுவனத்தின் பொருட்கள் முறைகேடான வகையில் விற்கப்படாமலும், கடத்தப்படாமலும் தடுக்க கைதேர்ந்த அதே பாலினத்தை சேர்ந்தவர்களை வைத்து மூடிய அறைகளுக்குள்தான் இந்த சோதனை நடத்தப்பட்டது.

ஒரு விமான நிலையத்தில் இருந்து வெளிவரும் எல்லா பயணிகளும் உட்படுத்தப்படும் சோதனைகள்தான் இது. இந்த சோதனையில் சில முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. சிலர் சிக்கியுள்ளனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com