சாதனைகளை முறியடித்த மகாத்மா காந்தியின் மூக்கு கண்ணாடி

இங்கிலாந்து ஏல மையத்தில் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் வகையில் மகாத்மா காந்தியின் மூக்கு கண்ணாடி 2 லட்சத்து 60 ஆயிரம் பவுண்டுக்கு ஏலம் போய் உள்ளது.
மகாத்மா காந்தி மூக்கு கண்ணாடி
மகாத்மா காந்தி மூக்கு கண்ணாடி
Published on: 

மகாத்மா காந்தி வட்ட வடிவ மூக்கு கண்ணாடி அணிவது வழக்கம். அவரது, தங்க பிரேம் போட்ட மூக்கு கண்ணாடி ஒன்று இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கு பகுதியில் ஹன்ஹாம் என்ற இடத்தில் உள்ள ஈஸ்ட் பிரிஸ்டல் ஆக்சன்ஸ் ஏல மையத்தில் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்டது.

இங்கிலாந்தில் உள்ள மங்கோட்ஸ்பீல்டு என்ற இடத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் இந்த மூக்கு கண்ணாடியை ஏலத்தில் வாங்கி உள்ளார். ஆனால் அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com