கோவை- சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு கட்டண ரெயில் நாளை இயக்கம்

கோவை, சென்னை சென்ட்ரல் இடையே சேலம் வழியாக சிறப்பு கட்டண ரெயில் நாளை முதல் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு தற்போது நடந்து வருகிறது.
கோவை- சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு கட்டண ரெயில் நாளை இயக்கம்
Published on

தருமபுரி:

கோவை ஜங்‌ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (3-ந் தேதி) அதிகாலை 12-15 மணிக்கு சிறப்பு கட்டண ரெயில் (எண். 06040) புறப் பட்டு காலை 8.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார் பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரெயிலில் ஒரு மூன்றடுக்கு ஏர்கண்டிசன் பெட்டி, 6 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், சரக்கு மற்றும் பிரேக் வேன் அடங்கிய 2 பெட்டிகள் இடம் பெற்று இருக்கும்.

இந்த ரெயிலுக்கான முன்பதிவு தற்போது நடந்து வருகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com