கவர்னர் அறிவுரைகளை சபாநாயகர் நிறைவேற்றுவார்: செ.கு.தமிழரசன் பேட்டி

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் மனு அளித்துள்ள நிலையில், கவர்னர் அறிவுரைகளை சபாநாயகர் நிறைவேற்றுவார் என்று செ.கு. தமிழரசன் கூறினார்.
கவர்னர் அறிவுரைகளை சபாநாயகர் நிறைவேற்றுவார்: செ.கு.தமிழரசன் பேட்டி
Published on

வேலூர்:

முல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் கவர்னரை சந்தித்து தனிதனியாக மனு கொடுத்தனர்.

அதில் பொதுசெயலாளர் சசிகலா ஆதரவினால் எடப்பாடி முதல் அமைச்சரானார். தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு மெஜாரிட்டி இல்லை. முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என கூறியிருந்தனர்.

இதனால் சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து முன்னாள் சபாநாயகர் செ.கு.தமிழரசன் கூறியதாவது:-

முதல்-அமைச்சருக்கு 19 எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்று சொல்ல முடியாது. எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அ.தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு மட்டுமே தனி பெரும்பான்மை உள்ளது.

19 எம்.எல்.ஏக்கள் கவர்னரிடம் மனு அளித்துள்ளனர். இந்த விவகாரத்தில் கவர்னரின் அறிவுரைகளை சபாநாயகர் நிறைவேற்ற வேண்டும். கவர்னரின் அறிவுரைகளை மட்டுமே சபாநாயகர் செயல்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com