சவுகார்பேட்டையில் தங்க கட்டியுடன் தப்பியவர் கைது

சவுகார்பேட்டையில் தங்க கட்டியுடன் தப்பியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சவுகார்பேட்டையில் தங்க கட்டியுடன் தப்பியவர் கைது
Published on

ராயபுரம்:

சவுகார்பேட்டை, என்.எஸ்.சி. போஸ் ரோட்டை சேர்ந்தவர் பிரதீப்குமார். அதே பகுதியில் நகை செய்யும் தொழில் செய்து வருகிறார். இங்கு பீகாரை சேர்ந்த ராகுல்ராய் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 20.5.17 அன்று 2 கிலோ தங்க கட்டியை உருக்குவதற்காக அருகில் உள்ள கடைக்கு ராகுல் ராயிடம் கொடுத்து அனுப்பினர்.

தங்க கட்டியுடன் சென்ற அவர் திரும்பி வரவில்லை. தங்கத்துடன் அவர் ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது. இது குறித்து யானை கவுனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ராகுல்ராய் பீகாரில் பங்கி இருப்பது தெரிந்தது. தனிப்படை போலீசார் விரைந்து சென்று அவனை கைது செய்தனர். அவனிடம் இருந்து 1½ கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்து.

தங்க கட்டி திருட்டுக்கு உடன் வேலை பார்த்த சந்தோஷ்குமார் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது. தற்போது அவன் மும்பையில் தங்கி உள்ளான். அவனை பிடிக்க தனிப்படை போலீசார் மும்பை விரைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com