தென்னாப்பிரிக்காவில் அதிபர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

தென்னாப்பிரிக்காவில் அதிபர் ஜேக்கப் ஷூமா மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. அதிபர் ஷூமாவுக்கு ஆதரவாக 198 ஓட்டுகளும், எதிராக 177 வாக்குகளும் கிடைத்தன.
தென்னாப்பிரிக்காவில் அதிபர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி
Published on

கேப்டவுன்:

தென்னாப்பிரிக்க அதிபராக கடந்த 2009-ம் ஆண்டு முதல் ஜேக்கப் ஷூமா இருந்து வருகிறார். அவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் உள்ளன.

எனவே அவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் கூறப்பட்டுள்ளன. எனவே அவரை பதவி நீக்கம் செய்ய பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அதை தொடர்ந்து நேற்று பாராளுமன்றத்தில் எம்.பி.க்களிடம் ரகசிய ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. ஆளுங்கட்சி எம்.பி.க்களே எதிராக இருந்ததால் அதிபர் ஷூமா பதவி இழப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. அதிபர் ஷூமாவுக்கு ஆதரவாக 198 ஓட்டுகளும், எதிராக 177 வாக்குகளும் கிடைத்தன.

எனவே ‘ஷுமா’வின் அதிபர் பதவி தப்பியது. இவர் மீது ஏற்கனவே 8 தடவை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவற்றில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது 9-வது முறை கொண்டு வரப்பட்டு வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com