3வது ஒருநாள் போட்டி - ஜிம்பாப்வேவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. #ZIMvRSA
3வது ஒருநாள் போட்டி - ஜிம்பாப்வேவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா
Published on

ஜிம்பாப்வே அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியும், தென் ஆப்பிரிக்கா அணியும் மோதின.

டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் சேன் வில்லியம்ஸ் மட்டும் பொறுப்பாக அரை சதமடித்து 69 ரன்களில் அவுட்டானார். பிரெண்டன் டெய்லர் 40 ரன்னில் வெளியேறினார். இறுதியில், ஜிம்பாப்வே அணி 49.3 ஓவரில் 228 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தென் ஆப்பிரிக்கா சார்பில் டேல் ஸ்டெயின், ககிசோ ரபடா தலா 3 விக்கெட்டும், இம்ரான் தாஹிர், பெலுகுவாயோ தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 229 ரன்களை இலக்காகக் கொண்டு தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. ஹென்ரிக்ஸ் 66 ரன்களும்,  கிளாசன் 59 ரன்களும் எடுத்து வெளியேறினர். மார்கிராம் 40 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 45.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன் 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. #ZIMvRSA

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com