தென்ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு: ஹென்ரிக்ஸ், கிறிஸ் மோரிஸ்க்கு இடமில்லை

உலகக்கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் பேட்ஸ்மேன் ஹென்ரிக்ஸ், ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை #WorldCup2019
தென்ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு: ஹென்ரிக்ஸ், கிறிஸ் மோரிஸ்க்கு இடமில்லை
Published on

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒவ்வொரு அணிகளும் 15 பேர் கொண்ட தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. இன்று மதியம் இலங்கை அணி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பேட்ஸ்மேன் ரீசா ஹென்ரிக்ஸ், ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. டு பிளிசிஸ் (கேப்டன்), 2. அம்லா, 3. குயின்டான் டி காக், 4. ஸ்டெயின், 5. ரபாடா, 6. டேவிட் மில்லர், 7. மார்கிராம், 8. இம்ரான் தாஹிர், 9. லுங்கி நிகிடி, 10. டுமினி, 11. பெலுக்வாயோ, 12. அன்ரிச் நோர்ட்ஜ், 13. பிரிட்டோரியஸ், 14. டஸ்சன், 15. தப்ரைஸ் ஷம்சி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com