டெல்லி: இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக சோஹைல் முகம்மது பொறுப்பேற்றார்

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக நியமிக்கப்பட்ட சோஹைல் முகம்மது டெல்லியில் உள்ள அந்நாட்டு தூதரகத்தில் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
டெல்லி: இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக சோஹைல் முகம்மது பொறுப்பேற்றார்
Published on

புதுடெல்லி:

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக நியமிக்கப்பட்ட சோஹைல் முகம்மது டெல்லியில் உள்ள அந்நாட்டு தூதரகத்தில் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

இந்தியாவிற்கான பாகிஸ்தான் நாட்டு தூதராக இருந்த அப்துல் பாசித் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சோஹைல் முகம்மது நியமிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இன்று சோஹைல் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் தூதரக அதிகாரிகள் பங்கேற்றனர்.

1985-ம் ஆண்டு பாகிஸ்தான் வெளியுறவு அதிகாரியாக பணியை தொடங்கிய அவர், தாய்லாந்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளின் தூதராக இதற்கு முன்னதாக பணியாற்றியுள்ளார். இன்று பொறுப்பேற்றுக் கொண்ட சோஹைல் விரைவில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com