பொன்னேரி ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கு எதிர்ப்பு

பொன்னேரி ரெயில் நிலைய அறிவிப்பு பலகைகளில் தமிழ் மொழியை இந்தி மொழிக்கு பின்னர் போட்டது ஏன்? என்று சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் ரெயில் நிலைய மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கு எதிர்ப்பு
Published on: 

பொன்னேரி:

பொன்னேரி ரெயில் நிலையத்தில் உள்ள பல அறிவிப்பு பலகைகளில் ஆங்கிலம் முதலிலும், இந்தி இரண்டாவதாகவும், தமிழ் மொழி கடைசியில் மூன்றாவதாகவும் எழுதப்பட்டு உள்ளது. தமிழ் சொற்கள் எழுத்துப்பிழையுடன், சொற்றொடர்கள் பொருந்தாத வண்ணம் பிழையாக எழுதப்பட்டுள்ளது.

இதனை கண்டித்து பொன்னேரி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் ரெயில் நிலைய மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அறிவிப்பு பலகைகளில் மாநில மொழி முதன்மையானதாக இருக்க வேண்டிய நிலையில் அதனை இந்தி மொழிக்கு பின்னர் போட்டது ஏன் ? என்று கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து தமிழ் மொழியினை முதன்மை மொழியாக அறிவிப்பு பலகைகளில் இடம் பெற செய்ய வேண்டும் எனவும், எழுத்துப்பிழைகளை திருத்தி எழுத வேண்டும் எனவும் புகார் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் அறிவிப்பு எழுத்துக்கள் உடனடியாக மாற்றப்படும் என உறுதியளித்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் பொன்னேரி ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com