அமெரிக்கா: சாலையில் அடுத்தடுத்து மோதிய 50 வாகனங்களால் பரபரப்பு - வீடியோ

அமெரிக்காவில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சாலையில் வெளிச்சமின்மை காரணமாக 50-க்கும் அதிகமான வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
விபத்து நடைந்த சாலை
விபத்து நடைந்த சாலை
Published on

வாஷிங்டன்:

அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது கடுமையான பனிப்பொழிவு நிலவிவருகிறது. பனிப்பொழிவால் பல்வேறு பகுதிகளில் சாலைவிபத்து சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் ஐஒவா மாகாணத்தில் இன்று நிலவிவரும் பனிப்பொழிவு காரணமாக 50-க்கும் அதிகமான வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

அம்மாகாணத்தின் அல்டோனா மற்றும் மேற்கு மிக்ஸ்மாஸ்டர் பகுதியை இணைக்கும் நெடுச்சாலையில் பனிப்பொழிவு மற்றும் வெளிச்சமின்மையால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள். 

வெளிச்சமின்மையால் முன்னே சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது மற்ற வாகனங்கள் வேகமாக மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் சிலர் காயமடைந்தனர். இதனால் பலமணி நேரத்திற்கு அச்சாலை மூடப்பட்டது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com