சாண்ட்விச் திருடியதால் பதவியை இழந்த ஸ்லோவேனிய எம்பி

ஸ்லோவேனியா நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், கடையில் சாண்ட்விச் திருடியதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து பதவி விலகியுள்ளார். #SloveniaMP
சாண்ட்விச் திருடியதால் பதவியை இழந்த ஸ்லோவேனிய எம்பி
Published on

லியுப்லியானா:

ஸ்லோவேனியாவின் ஆளுங்கட்சியான எல்எம்எஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தரிஜ் கிரஜ்சிச் (வயது 54). இவர் சமீபத்தில் லியூப்லியானா நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு சாண்ட்விச் வாங்க சென்றுள்ளார். அப்போது சிறிது நேரத்தில் அங்கிருந்த சாண்ட்விச் ஒன்றை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்.

அவர் சாண்ட்விச்சை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார். மேலும், எம்பி பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

இதுபற்றி தரிஜ் கிரஜ்சிச் கூறுகையில், “கடையில் இருந்த ஊழியர்கள் என்னை கண்டுகொள்ளாததால் ஒரு கட்டத்தில் எரிச்சலுற்று,  அந்த கடையின் பாதுகாப்பை பரிசோதனை செய்யும் விதமாக அங்கிருந்து சாண்ட்விச்சை எடுத்துக்கொண்டு சென்றேன். அப்போது என்னை யாரும் கவனிக்கவில்லை. என்னை பிடிக்கவும் முயற்சிக்கவில்லை. ஆனால், சிறிது நேரத்தில் பணம் செலுத்துவதற்காக திரும்பி வந்தேன். நான் குறைந்தது மூன்று நிமிடங்களாவது பொறுத்திருந்திருக்க வேண்டும்" என்றார். #SloveniaMP

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com