எட்டயபுரத்தில் 6 வயது சிறுவன் கொலை - உறவினர்கள் சாலை மறியல்

எட்டயபுரம் அருகே 6 வயது சிறுவன் நகுலன் கொலை செய்யப்பட்டதையடுத்து அவர்களது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிறுவன் நகுலன்
சிறுவன் நகுலன்
Published on

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள வடக்கு முத்துலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசங்கர் (வயது 29). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ரேவதி. இவர்களது மகன் நகுலன் (6). இவன் அங்கு உள்ள ஊராட்சி தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்நிலையில் நேற்று பள்ளி விடுமுறையை யொட்டி வீட்டின் அருகே சிறுவன் விளையாடி கொண்டிருந்தான். பின்னர் நேற்று மாலை விளையாடி கொண்டிருந்த சிறுவன் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவனது பெற்றோர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் அவன் கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து எட்டயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரில் அதே ஊரை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும், அவர் தான் தனது குந்தையை கடத்தி இருக்கலாம் எனவும் தெரிவித்தனர். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் கலா, தனிப்பிரிவு ஏட்டு கார்த்திக் மற்றும் போலீசார் அருள் ராஜை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று காலை முத்தலாபுரம் காட்டு பகுதியில் சிறுவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். ஆனால் சிறுவனின் உடல் அங்கு இல்லை.

இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதற்கிடையே சிறுவன் நகுலனின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com