சிவகாசியில் பட்டாசு குடோன் அலுவலகத்தில் தீ விபத்து

சிவகாசியில் பட்டாசு குடோன் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
சிவகாசியில் பட்டாசு குடோன் அலுவலகத்தில் தீ விபத்து
Published on: 

விருதுநகர்:

சிவகாசி ஏழுகோவில் தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 52). இவருக்கு சொந்தமான பட்டாசு குடோன் வி.சொக்கலிங்காபுரத்தில் உள்ளது. இங்கு ஏராளமான பட்டாசுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த குடோனை ஒட்டி அலுவலக அறையும் உள்ளது.

நேற்று அந்த அறைக்கு ஏ.சி. வசதி செய்யப்பட்டது. இதற்காக மின் இணைப்புகள் மாற்றி அமைக்கப்பட்டன.

இந்த நிலையில் இன்று காலை பட்டாசு ஆலை அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் சிவகாசி தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக குடோனுக்கு தீ பரவவில்லை. இதனால் அங்கிருந்த பட்டாசுகள் தப்பின. அவை வெடித்து இருந்தால் பெரும் விபத்தாக மாறி இருக்கும்.

தீ விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

X