மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: சிமோனா ஹாலெப் வெற்றி

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப், மகரோவாவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். #MadridOpen
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: சிமோனா ஹாலெப் வெற்றி
Published on

மாட்ரிட்:

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-1, 6-0 என்ற நேர்செட்டில் மகரோவாவை (ரஷியா) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் ஜெலீனா ஆஸ்டாபென்கோ (லாத்வியா) 3-6, 3-6 என்ற நேர்செட்டில் ருமேனியாவின் கேமெலியா பெகுவிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

இன்னொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-3, 3-6, 2-6 என்ற செட் கணக்கில் அனெட் கோன்டாவெய்ட்டிடம் (எஸ்தோனியா) அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார். மற்ற ஆட்டங்களில் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) ஆகியோர் எளிதில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.  #MadridOpen #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com