

கும்பகோணம்:
சென்னை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் குமார் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் அடுத்த மேலையூர் கொத்துக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்.
ராஜாராம்-அம்பிகா தம்பதியின் மகனான சதீஷ்குமார் கடந்த 2008-ம் ஆண்டு சப்- இன்ஸ்பெக்டராக தேர்வாகி தற்போது அயனாவரம் போலீஸ் நிலையத்தில் பணி புரிந்து வந்தார்.
இந்நிலையில், அவர் நேற்றிரவு போலீஸ் நிலையத்திலேயே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்திற்கு உயர் அதிகாரிகள் கொடுத்த மன அழுத்தமே காரணம் என்று மேலையூரில் உள்ள அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்திள்ளனர்.
இதுகுறித்து அவரது உறவினர் ராஜி என்பவர் கூறியதாவது:
சதீஷ்குமார் நேர்மையான அதிகாரி. அவர் லஞ்சம் வாங்க மாட்டார் உயர்அதிகாரிகள் கொடுத்த டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்டுள்ளர்.
இவ்வாறு அவர் கூறினார்.
சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் குமாரின் தற்கொலையால் அவரது கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. #tamilnews