டீன் ஜோன்ஸ் மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல்

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தலைசிறந்த வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
டீன் ஜோன்ஸ்
டீன் ஜோன்ஸ்
Published on

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ். 59 வயதான இவர் தலைசிறந்த கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வந்தார். மும்பையில் இருந்தவாறு ஐபிஎல் 2020 சீசனில் வர்ணனையாளராக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் இன்று மாரடைப்பு காரணமாக திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணம் கிரிக்கெட் உலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆஸ்திரேலியா அணிக்காக 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 சதங்களுடன் 3631 ரன்கள் அடித்துள்ளார். 164 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 சதம், 46 அரைசதங்களுடன் 6068 ரன்கள் அடித்துள்ளார்.

டீன் ஜோன்சின் மரணத்தை யாராலும் எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரது மரணத்திற்கு கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

சச்சின் தெண்டுல்கர் ‘‘டீன் ஜோன்ஸ் மரணம் அடைந்தார் என்ற செய்தி முற்றிலும் இதயத்தை நொறுக்குவதாக இருந்தது. அற்புதமான ஆன்மா முன்னதாகவே சென்று விட்டது. என்னுடைய முதல் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின்போது அவருடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவருடைய ஆத்மா சாந்தியடைய, என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

பார்த்தீவ் பட்டேல் ‘‘ என்னுடைய நண்பர் விரைவில் சென்று விட்டார். மிகப்பெரிய அதிர்ச்சி. அவரது குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

ஹர்பஜன் சிங் ‘‘இந்த செய்தி கவலை அளிக்கும் விதமாக இருந்தது. குடும்பத்திற்கு அனுதாபங்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.

அஸ்வின் ‘‘அதிர்ச்சி, பேரழிவு’’ எனத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீகாந்த் ‘‘என்னுடை சிறந்த நண்பன் காலமானார் என்ற செய்தி கவலை அளிக்கிறது. அவர் எப்போதும் முழு எனர்ஜி மற்றும் நேர்மறையாக இருப்பவர். அவரை தவற விடுகிறேன். ஆத்மா சாந்தி அடையட்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

ஆகாஷ் சோப்ரா, இர்பான் பதான், அனில் கும்ப்ளே, ரவி சாஷ்திரி, சேவாக், ஷிகர் தவான், விராட் கோலி, ஆர்.பி. சிங், முகமது கைஃப், குருணால் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா போன்ற பலரும் இரங்கல தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com