சென்னை காமராஜர் சாலையில் உள்ள சிவாஜி கணேசன் சிலை அகற்றம்

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் வைக்கப்பட்டிருந்த நடிகர் சிவாஜி கணேசனின் சிலை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது
சென்னை காமராஜர் சாலையில் உள்ள சிவாஜி கணேசன் சிலை அகற்றம்
Published on

நடிகர் சிவாஜி கணேசனின் சிலை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நிறுவப்பட்டு இருந்தது. இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, சிவாஜி கணேசன் சிலையை அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு 1 மணியளவில் சிவாஜி கணேசன் சிலையை அகற்றும் பணி தொடங்கியது.

இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். முதல் கட்டமாக சிலையை சுற்றிலும் இரும்பு தடுப்பு வேலிகளை போலீசார் அமைத்தனர்.  பின்பு நடிகர் சிவாஜி கணேசனின் அதிகாலையில் பத்திரமாக சிலை அகற்றப்பட்டது

X

Maalai Malar
www.maalaimalar.com