மும்பையில் சிவசேனா கட்சி பிரமுகர் சுட்டுக்கொலை

மும்பையின் கண்டிவாலி பகுதியில் சிவசேனா கட்சியை சேர்ந்த சச்சின் சவந்த் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #SachinSawant #ShivSenaleadershotdead #Mumbai
மும்பையில் சிவசேனா கட்சி பிரமுகர் சுட்டுக்கொலை
Published on

மும்பை:

மும்பையின் கண்டிவாலி பகுதியில் சிவசேனா கட்சியை சேர்ந்த சச்சின் சவந்த் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் கண்டிவாலி பகுதியில் உள்ள கோகுல் நகர் பகுதியில் நேற்றிரவு சிவசேனா கட்சியை சேர்ந்த சச்சின் சவந்த் (40) என்பவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வாகனத்தை வழிமறித்த சில மர்ம நபர்கள் சச்சினை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த சச்சினை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சச்சினை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் சிவசேனா கட்சி பிரமுகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #SachinSawant #ShivSenaleadershotdead #Mumbai

X

Maalai Malar
www.maalaimalar.com