வெங்கையா நாயுடுவுக்கு பிரதமர் ஷேக் ஹசீனா வாழ்த்து - வங்கதேசம் வருமாறு அழைப்பு

துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கையா நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தங்கள் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
வெங்கையா நாயுடுவுக்கு பிரதமர் ஷேக் ஹசீனா வாழ்த்து - வங்கதேசம் வருமாறு அழைப்பு
Published on

டாக்கா:

துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் 10-ந் தேதி நிறைவடைய உள்ள நிலையில், புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. 

இதில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தியை விட இரு மடங்கி வாக்குகள் பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்ட முன்னாள் நகர்ப்புற வளர்ச்சி மந்திரியான வெங்கையா நாயுடு அபார வெற்றி பெற்றார். 

இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கையா நாயுடுவுக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வாழ்த்து தெரிவித்தார். மேலும் வங்கதேசம் வருமாறு வெங்கையா நாயுடுவுக்கு ஹசீனா அழைப்பு விடுத்தார்.

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான உறவு தற்போது சிறப்பாக உள்ளதாகவும், இனி வரும் நாட்களில் மேலும் உறவு வலுப்பெறும் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com