ஷீனா போரா கொலை வழக்கு குற்றவாளி ஆஸ்பத்திரியில் அனுமதி

மும்பை மத்திய சிறையில் இருந்த ஷீனா போரா கொலை வழக்கு குற்றவாளியான பீட்டர் முகர்ஜி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். #SheenaBora #SheenaBoramurder #PeterMukerjea
ஷீனா போரா கொலை வழக்கு குற்றவாளி ஆஸ்பத்திரியில் அனுமதி
Published on

மும்பை:

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி(43) தனது மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த 2015-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். மும்பையில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்திராணி ஏற்கனவே நடந்த இரு திருமணங்கள் மற்றும் முன்னாள் கணவர்கள் மூலம் பிறந்த 3 பிள்ளைகள் பற்றிய விவரத்தையும் மறைத்து பீட்டர் முகர்ஜியை மூன்றாவதாக மணந்ததாக கூறப்படுகிறது.

பீட்டர் முகர்ஜிக்கு அவருடைய முன்னாள் மனைவி மூலம் பிறந்த மகன் ராகுலை ஷீனா போரா முறை தவறி காதலித்ததால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கு இந்திராணியின் 2-வது கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷாம் ராய் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

சி.பி.ஐ. விசாரித்துவரும் இந்த கொலை வழக்கில் இந்திராணி, சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷாம் ராய், மூன்றாவது கணவர் பீட்டர் முகர்ஜி  ஆகிய 4 பேரையும் மும்பை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மும்பையில் உள்ள ஆர்த்தர் சாலை மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். 47 வயதாகும் இந்திராணி முகர்ஜி பைகுல்லா பெண்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக நெஞ்சு வலிக்காக சிறையில் சிகிச்சை பெற்றுவந்த பீட்டர் முகர்ஜி நேற்று மாலை நெஞ்சு வலி அதிகமாக இருப்பதாக கூறியதால் அவரை பரிசோதித்த சிறை மருத்துவர்கள் அறிவுரையின்படி அவர் மும்பை ஜே.ஜே.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். #SheenaBora #SheenaBoramurder  #PeterMukerjea

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com