அமெரிக்கன் ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம் - ஷரபோவா அதிர்ச்சி தோல்வி

அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் போட்டியின் நான்காவது சுற்றில் வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். ஷரபோவா அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
அமெரிக்கன் ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம் - ஷரபோவா அதிர்ச்சி தோல்வி
Published on

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

இத்தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற நான்காவது சுற்று போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸும், ஸ்பெயினின் கர்லா நவரோவும் மோதினர். இப்போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 3-6, 6-1 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதிப்பெற்றார்.

இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் ரஷியாவின் ஷரபோவா, லடிவியாவின் அனஸ்டசிஜா செவச்டோவாவை எதிர்கொண்டார். இப்போட்டியின் முதல் சுற்றை ஷரபோவா 7-5 என கைப்பற்றினார். அடுத்த இரண்டு சுற்றுகளிலும் லடிவியா வீராங்கனை சிறப்பான ஆட்டத்தை வெளிகாட்டினார். இரண்டாவது சுற்றை 6-4 என ஷரபோவா இழந்தார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய செவச்டோவா மூன்றாவது சுற்றையும் 6-2 என கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் 5-7, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் செவச்டோவா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். ஷரபோவா தோல்வியடைந்து இப்போட்டியில் இருந்து வெளியேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com