தகுதி நீக்கத்தை எதிர்த்து சரத் யாதவ், டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு

டெல்லி மேல்சபையில் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் சரத் யாதவ் நேற்று வழக்கு தொடுத்தார்
தகுதி நீக்கத்தை எதிர்த்து சரத் யாதவ், டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு
Published on

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்த முதல்-மந்திரி நிதிஷ்குமார், ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் மெகா கூட்டணியில் இருந்து வெளியேறி பா.ஜனதாவுடன் கைகோர்த்தார். அதை டெல்லி மேல்சபை எம்.பி.க்களான கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவும், அலி அன்வரும் எதிர்த்து போர்க்கொடி உயர்த்தினர்.

இதையடுத்து அவர்கள் பதவியை பறிக்க ஐக்கிய ஜனதாதளம் கட்சித்தலைமை முடிவு செய்து, டெல்லி மேல்சபை தலைவருக்கு கடிதம் எழுதியது. அதன் பேரில் அவர்கள் இருவரும் டெல்லி மேல்சபையில் இருந்து கடந்த 4-ந் தேதி தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் சரத் யாதவ் நேற்று வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com