உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணி வெல்லும் - வார்னே நம்பிக்கை

உலக கோப்பையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெல்லும் என்று அந்த அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே நம்பிக்கை தெரிவித்தார்.
வார்னே
வார்னே
Published on

லண்டன்:

உலக கோப்பை போட்டி குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த 12 மாதங்களில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்படாததால் உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி சோபிக்காது என்று பலரும் எழுதுகிறார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலிய அணி நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி வருகிறது. முந்தைய கால ஆஸ்திரேலிய அணியை போல் எந்த இடத்திலும், எந்த அணியையும் வெல்லும் அளவுக்கு முன்னேற்றம் கண்டு இருக்கிறது.

இந்த உலக கோப்பை போட்டியை இந்தியா, இங்கிலாந்து அணிகள் வெல்ல வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் ஒரு நாள் போட்டியில் அவர்கள் சமீபகாலங்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். கடந்த கால வரலாறுகளை புரட்டி பார்த்தால் உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி எவ்வளவு சிறப்பாக விளையாடி இருக்கிறது என்பது தெரியும். ஆஸ்திரேலிய அணி கடந்த உலக கோப்பையை வென்றது. கடைசி 6 உலக கோப்பை போட்டிகளில் 4-ல் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த உலக கோப்பை போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி நிச்சயம் பட்டம் வெல்லும் என்று நான் நம்புகிறேன்.

இவ்வாறு ஷேன் வார்னே கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com