தைவானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1 அலகுகளாக பதிவானது

தைவான் நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று ரிக்டர் அளவிகோலில் 6.1 அலகுகளாக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. #Earthquake #Taiwan #USGS
தைவானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1 அலகுகளாக பதிவானது
Published on

தைபே:

தைவான் நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று ரிக்டர் அளவிகோலில் 6.1 அலகுகளாக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  கடற்கரை நகரமான ஹுவாலியனில் இருந்து வடக்கு திசையில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலும், கடலுக்கடியில் சுமார் எட்டு கிலோமீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதே பகுதியில் மேற்கொண்டு 5.2 லிருந்து 5.5 ரிக்டர் அலகுகள் வரையிலான நான்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் குறைந்த அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. #Earthquake #Taiwan #USGS #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com