கோல்டன் குளோப் விருது பெற்ற இந்திய வம்சாவளி ஹாலிவுட் நடிகர் மீது ‘செக்ஸ்’ புகார்

அமெரிக்காவில் கோல்டன் குளோப் விருது பெற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹாலிவுட் நடிகர் மீது பெண் ஒருவர் ‘செக்ஸ்’ புகார் அளித்துள்ளார்.
கோல்டன் குளோப் விருது பெற்ற இந்திய வம்சாவளி ஹாலிவுட் நடிகர் மீது ‘செக்ஸ்’ புகார்
Published on

நியூயார்க்:

சிறந்த ஆலிவுட் சினிமா படங்களுக்கு வழங்கப்படும் ‘கோல்டன் குளோப்’ விருது விழா அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சமீபத்தில் நடந்தது.

அதில் சிறந்த தொலைக்காட்சி நகைச்சுவை நடிகருக்கான விருது ஆசிஷ் அன்சாரிக்கு வழங்கப்பட்டது. இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது தந்தை டாக்டர் சவுகத் அன்சாரி. இவர் நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்தவர்.

இந்த நிலையில் நடிகர் ஆசிஷ் அன்சாரி மீது ஒரு பெண் ‘செக்ஸ்’ புகார் தெரிவித்துள்ளார். அதில், கோல்டன் குளோப் விருது விழாவின் போது ஆசிஷ் அன்சாரியுடன் நட்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அவர் நியூ யார்க்குக்கு என்னை அழைத்து சென்று ‘செக்ஸ்’ சில் ஈடுபட்டார் என குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு ஆசிஷ் அன்சாரி விளக்கம் அளித்துள்ளார். அந்த பெண்ணின் ஒப்புதலுடன் தான் அனைத்தும் நடந்தது. அவர் கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com