

ஹாங்காங்:
சீனாவின் தெற்கில் உள்ளது தன்னாட்சி பெற்ற ஹாங்காங் மாகாணம். ஹாங்காங்கை ஹாட்டோ எனும் புயல் கடுமையாக தாக்கியுள்ளது. காற்று பலத்த வேகத்துடன் வீசியது. ஹாங்காங்கின் மையப்பகுதியில் மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
காற்று வேகமாக வீசப்படுவதால் வீடுகளின் கூரை அடித்து வீசப்பட்டது. தெருக்களில் மக்கள் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மழையும் பெய்து வருவதால் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. பெரும்பாலான பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. வர்த்தக நடவடிக்கைகள் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
புயலின் தாக்கத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்ற போக்குவரத்து வசதிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஹாங்காங் மாகாணத்தை கடந்த அண்டு நிடா புயல் கடுமையாக தாக்கியது குறிப்பிடத்தக்கது.