திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணின் ஆபாச படத்தை மணமகனுக்கு அனுப்பிய டி.வி. நடிகர் கைது

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணின் ஆபாச படத்தை மணமகனுக்கு அனுப்பிய டி.வி. நடிகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். #PocsoAct
திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணின் ஆபாச படத்தை மணமகனுக்கு அனுப்பிய டி.வி. நடிகர் கைது
Published on

திருவனந்தபுரம்:

திருவனந்தபுரம் பாலோடு பகுதியைச் சேர்ந்தவர் ஷான், (வயது 25).

மலையாள டெலிவி‌ஷன் தொடர்களில் ஷான் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

அந்த பெண்ணுக்கு டி.வி.யில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஷான் கூறினார். இதனால் அந்த பெண்ணும் ஷானுடன் நெருங்கி பழகினார். இதில் அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. இருவரும் பல இடங்களுக்கு சென்று காதலை வளர்த்தனர்.

இந்த நிலையில் ஷானுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அந்த பெண் ஷானை பிரிந்து சென்றார். அவரை சந்திக்கவும் மறுத்தார். காதலையும் உதறினார்.

இதையடுத்து அந்த பெண்ணுக்கு பெற்றோர் வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி, வெளிநாட்டில் வேலை பார்க்கும் வாலிபர் ஒருவருடன் பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

காதலிக்கு வேறு வாலிபருடன் திருமணம் நிச்சயமான தகவல் நடிகர் ஷானுக்கு தெரிய வந்தது. அவர், பெண்ணின் ஆபாச படங்களை அவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட மணமகனுக்கு அனுப்பி வைத்தார்.

அந்த படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்தி விட்டார்.

திருமணம் நின்று போனதற்கு நடிகர் ஷான்தான் காரணம் என்பது பெண்ணுக்கு தெரிய வந்தது. அவர் இதுபற்றி பாலோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி ஷானை கைது செய்தனர்.

ஷான் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருவனந்தபுரம் ஜெயிலில் அடைக்கப்பட்டார். #PocsoAct

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com