மைதானத்தை சேதப்படுத்தியதாக செரீனாவுக்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம்

டென்னிஸ் கோர்ட்டை சேதப்படுத்தியதாக முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ்க்கு விம்பிள்டன் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் அபராதம் விதித்துள்ளனர்.
செரீனா வில்லியம்ஸ்
செரீனா வில்லியம்ஸ்
Published on

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.

இவர் பயிற்சியின்போது டென்னிஸ் கோர்ட்-ஐ சேதப்படுத்தியதாக விம்பிள்டன் தொடரின் ஒருங்கிணைப்பாளர்கள் 10 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதமாக விதித்துள்ளனர்.

செரீனா வில்லியம்சன் காலிறுதியில் அமெரிக்காவைச் சேர்ந்த அலிசன் ரிஸ்க்-ஐ எதிர்கொள்கிறார். அதன்பின் ஆண்டி முர்ரே உடன் இணைந்து கலப்பு இரட்டையர் போட்டியில் விளையாடுகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com