இண்டியன் வெல்ஸ் டென்னிஸில் செரீனா வில்லியம்ஸ் அசத்தல் வெற்றி

டென்னிஸில் இருந்து சுமார் 15 மாதங்கள் விலகியிருந்த செரீனா வில்லியம்ஸ் இண்டியன் வெல்ஸ் தொடரின் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.
இண்டியன் வெல்ஸ் டென்னிஸில் செரீனா வில்லியம்ஸ் அசத்தல் வெற்றி
Published on

அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் பெண்கள் டென்னிஸ் அசோசியேசனின் இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

2017-ம் ஆண்டு ஆஸ்திரேலியா ஓபனுக்குப் பிறகு விளையாடாமல் இருந்து செரீனா வில்லியம்ஸ் இதில் கலந்து கொண்டார். செரீனா வில்லியம்ஸ் கடந்த 17 வருடத்தில் பெரும்பாலும் இண்டியன்வெல்ஸ் தொடரில் விளையாடியது கிடையாது.

தற்போது 3-வது முறையாக தொடக்க ஆட்டத்தில் ஷரினா தியாஸ்-ஐ செரீனா வில்லியம்ஸ் எதிர்கொண்டார். இதில் செரீனா 7-5, 6-3 என நேர்செட் கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

சுமார் 15 மாதங்கள் விளையாடாமல் இருந்ததால் செரீனாவிற்கு தரவரிசை வழங்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com