செப்டம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.91,916 கோடியாக குறைந்தது

கடந்த ஆண்டு செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி. வருவாயுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 2.67 சதவீதம் குறைந்துள்ளது.
ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி
Published on

புதுடெல்லி:

கடந்த செப்டம்பர் மாதம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வருவாய் ரூ.91,916 கோடியாக உள்ளது. இதுதான் இந்த நிதி ஆண்டின் மிக குறைந்த ஜி.எஸ்.டி. வருவாய் ஆகும். ஆகஸ்டு மாதத்தில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.98,202 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி. வருவாயுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 2.67 சதவீதம் குறைந்துள்ளது.

மொத்த ஜி.எஸ்.டி. வருவாயில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.16,630 கோடி, மாநில ஜி.எஸ்.டி. ரூ.22,598 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.45,069 கோடி, இறக்குமதி மீதான கூடுதல் வரி ரூ.7,620 கோடி என மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com